புகை வேலைக்குப் பகை
இன்று ஒரு செய்தி கண்ணில் பட்டது. இங்கிலாந்தில் ஒரு பெண்மணி பணிக்குச் சேர்ந்து முக்கால் மணி நேரத்தில், தன் மேலாளரிடம் தான் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர் என்று ஒப்புக் கொண்டு வேலையை இழந்தார் ! டாடா ·ப்ளோ கம்யூனிகேஷன்ஸ் என்ற அந்த நிறுவனம், அப்பெண் பணி நேரத்தில் புகை பிடிக்க மாட்டேன் என்று உறுதி கூறியும், புகை பிடிப்பவரை பணிக்கு அமர்த்துவதை நிறுவனத்தின் பாலிஸி அனுமதிப்பதில்லை என்று கூறி விட்டது !
ஒருவர் பணிக்கு ஏற்றவரா என்று நிர்ணயிப்பதற்கு பல முக்கியத் தகுதிகள் இருக்கையில், புகை பிடிப்பவர் பணியில் சேர தடை விதிக்கும் நிறுவன நிர்வாகத்திற்கு எதிராக சட்டபூர்வமாக நடவடிக்கை கோரப் போவதாக ஸோ·பி என்ற அப்பெண் கூறியிருக்கிறார். நேர்முகத் தேர்வின் போது புகை பிடிப்பது குறித்து தன்னை எதுவும் கேட்காமல் விட்டது யார் குற்றம் என்றும் கேள்வி எழுப்புகிறார்.
நிர்வாகமோ, தங்கள் பாலிசி சட்டத்திற்குட்பட்டது தான் என்றும், அவ்வாறு புகை பிடிப்பவரை பணியில் சேரா வண்ணம் நேர்மறையாக ஒதுக்குவதில் (positive discrimination) நிறுவனம் பெருமைப்படுகிறது என்றும் மார் தட்டுகிறது! புகை பிடிப்பவரின் உரிமையை வலியுறுத்தும் FOREST என்ற அமைப்போ, நிறுவன வளாகத்துள் புகை பிடிக்கத் தடை விதிப்பது என்பது வேறு, புகை பிடிப்பவரை பணிக்கு அமர்த்த தடை என்பது அராஜகம் என்று கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இந்தக் கூத்தையெல்லாம் பார்த்தா, நம்ம அமைச்சர் அன்புமணி எவ்வளவோ பரவாயில்லைன்னு தோணுதுங்க, என்ன நான் சொல்றது ;-)
என்றென்றும் அன்புடன்
பாலா
நன்றி: Deccan Chronicle
5 மறுமொழிகள்:
பாலா
நானும் படித்தேன் அந்த செய்தியை.
முன் கூட்டியே அந்தப் பெண்ணிடம் அவர்கள் சொல்லாதது தவறு தானே தவிர, positive discrimination என்றெல்லாம் ஒப்பேத்துவது சரியல்ல.
புகை பிடிப்பவர்களை பணியில் அமர்த்துவது தவறென்பது - நல்ல விஷயம் தான். ஆனால், அதை செய்வதற்கு ஒரு முறை வேண்டுமல்லவா?
புகை பிடிப்பதை முன்கூட்டியே சொல்லி வேலை கிடையாது என்றால், இதுபோல வேறு எவை எல்லாம் எனச் சொல்லி ஒரு பட்டியல் தர வேண்டியிருக்குமே.
டெல்லியில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் ஐந்து பெண்களே சட்டப்படி பொது இடங்களில் புகை பிடித்ததாக தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.
சட்டத்தின் முன் ஆண், பெண் இருவரும் சமம் எனச் சொல்வதாக ஒரு
செய்தி.
வேலை தொடர்பாக இங்கு இன்னும் அந்த அளவிற்கு வரலில்லை.ஆனால், வந்தாலும் வரும்.
நண்பன், கெமீலியான்,
தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
POSITIVE DISCRIMINATION என்பதெல்லாம் சுத்த பேத்தல் !!!
புகை பிடிப்பவர்களை பணியில் அமர்த்துவது தவறென்பது - நல்ல விஷயம் தான். புகை பிடிப்பவர்களால் பிடிப்பவர்களுக்கு மட்டும் ஆபத்து என்றால் யாரும் அதில் தலையிடத் தேவையில்லை. மற்றவர்களுக்கும் தொல்லையான விடயந்தானே அது.
//அப்பெண் பணி நேரத்தில் புகை பிடிக்க மாட்டேன் என்று உறுதி கூறியும், புகை பிடிப்பவரை பணிக்கு அமர்த்துவதை நிறுவனத்தின் பாலிஸி அனுமதிப்பதில்லை என்று கூறி விட்டது !
//
சந்திரவதனா,
பணி நேரத்தில் புகை பிடிக்க மாட்டேன் என்று உறுதி கூறிய பின்னும், அவரை பணி நீக்கம் செய்தது தவறு என்பதே என் கருத்து.
//மற்றவர்களுக்கும் தொல்லையான விடயந்தானே அது. //
உண்மை தான். நன்றி.
Post a Comment